பிரிஸ்பேனில் விடுதியொன்றில் இருந்து தாயும், மகளும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கென்மோர் ஹில்ஸ் பகுதிக்கு நேற்று மதியம் அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது 54 வயதான பெண்ணும், 8 வயது சிறுமியும் இறந்து கிடந்தனர்.
இது சந்தேகத்துக்கிடமான மரணமாகக் கருதப்படுகின்றது. பொலிஸார் விசாரணை வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவமானது பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.