சிட்னியிலுள்ள தனியார் ஆண்கள் பாடசாலையில் மாணவரொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் ஆசிரியை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
15 வயது மாணவனையே 24 வயதான ஆசிரியை தகாத உறவுக்கு உட்படுத்தியுள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இரு வாரங்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து குறித்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணைக்கு பாடசாலை நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது.
அவர் நேற்று உள்ளுர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்க நீதிமன்றம் இணங்கியது. எனினும், பிணைக்கு எதிராக பொலிஸார் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இது தொடர்பான மனு நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் ஆசிரியை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.