ரொக்க வட்டி வீதத்தை 3.6 சதவீதமாக ஆஸ்திரேலிய மத்திய வங்கி நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டம் அதன் ஆளுநர் தலைமையில் நேற்றும், இன்றும் நடைபெற்றது.
பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இதற்கமையவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் ரொக்க வட்டிவீதம் 4.35 ஆக இருந்தது. அதன்பின்னர் மூன்று தடவைகள் குறித்த வீதம் குறைக்கப்பட்டுள்ளது.