கொலை குற்றத்துக்காக சிறையில் உள்ள கைதி கொலை!
சிட்னியில் சிறுவன் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்துவந்த குற்றவாளி, சிறைச்சாலைக்குள் கொலை செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான நபரொருவரே தாக்குதலொன்றில் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
படுகாயமடைந்திருந்த குறித்த கைதிக்கு துணை வைத்தியர்களால் முதலுதவி அளிக்கப்பட்டாலும் அவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
2015 ஆம் ஆண்டிலேயே 16 வயது இளைஞன் ஒருவரை இவர் கொலை செய்துள்ளார். இக்குற்றத்திற்காக 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.