பாலஸ்தீனத்தில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஆஸ்திரேலியா மேலும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று சிட்னி பல்கலைக்கழக சர்வதேச சட்டப் பேராசிரியரும், ஐ.நா. அறிக்கையாளருமான பேராசிரியர் பென் சவுல் வலியுறுத்தினார்.
அத்துடன், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான ஆஸ்திரேலியாவின் முடிவை அவர் வரவேற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா 'பாலஸ்தீனத்தில் மனித உரிமைகள் குறித்து இன்னும் உறுதியான நடவடிக்கை எடுத்து வலுவான தலைமைப் பாத்திரத்தை வகிக்க வேண்டும்" எனவும் அழைப்பு விடுத்தார்.
ஆஸ்திரேலியா உலகின் 13வது பெரிய பொருளாதார சக்தியாகும். எனவே, கூடுதல் பொறுப்பு உள்ளது எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.