சிட்னி மேற்கில் இவ்வருட ஆரம்பத்தில் பாதாள குழு தலைவரொருவரை சுட்டுக்கொலை செய்த நபர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தாவூத் ஜகாரியா என்ற 32 வயது நபரே கடந்த மே மாதம் 25 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரித்து வந்த நிலையிலேயே 21 வயது இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.