துப்பாக்கியைக் காட்டி மிரட்டி யுவதியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கடத்திச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் குயின்ஸ்லாந்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
மாரூச்சிடோரில், மவுட் தெருவில் உள்ள வணிக நிறுவனத்திற்குள் நேற்றிரவு 33 வயது நபரொருவர் நுழைந்துள்ளார்.
அங்கிருந்த பெண் ஊழியரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி , பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் தனது வாகனத்தில் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள், இன்று அதிகாலை 2 மணியளவில் புடெரிமில், சிட் லிங்கார்ட் டிரைவில் உள்ள பூங்காவுக்கு அருகில் வாகனத்தைக் கண்காணித்து, சந்தேக நபரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆயுதம் ஏந்தி வன்முறை, பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.