இஸ்ரேல்மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 12 ஆம் திகதி ஆஸ்திரேலியா, சிட்னியில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அத்துடன், இஸ்ரேலுக்கு போர் விமான பாக ஏற்றுமதியை நிறுத்துமாறும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.
ஹைட் பார்க்கில் ஆரம்பமாகும் போராட்டம், பேரணியாக சிட்னி ஓபரா ஹவுஸ் முன்பகுதி வரை வருவதற்கு திட்டமிட்டுள்ளது.
எனினும், இப்போராட்டத்தை தடுப்பதற்கு நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் சட்டத்தை நாடியுள்ளனர். மாற்று வழிமுறை குறித்த பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காவல்துறையினரின் திட்டத்துக்கு எதிரக சட்ட ரீதியாக போராடுவோம் என போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.