எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து சூசன் லே வை நீக்க வேண்டும் என்ற நோக்கில் தான் பதவி துறக்கவில்லை என்று லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ ஹேஸ்டி தெரிவித்தார்.
குடியேற்றக் கொள்கை தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக நிழல் உள்துறை அமைச்சு பதவியை துறப்பதாக ஆண்ட்ரூ ஹேஸ்டி நேற்று அறிவித்தார்.
அத்துடன், லிபரல் கட்சியை என்றாவது ஒரு நாள் வழிநடத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
அவரின் இந்த கருத்து லிபரல் கட்சியின் தற்போதைய தலைவர் சூசன் லே பதவி விலக வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்துகின்றது என சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இந்நிலையில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஆண்ட்ரூ, தற்போதைய தலைவரை மாற்ற வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
நான் நிழல் அமைச்சரவை பதவியை துறந்திருந்தாலும் கட்சியுடனான எனது பயணம் தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.