தனக்குரிய அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவு அறிக்கையிட்டுள்ளது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
சமூகவலைத்தளம் ஊடாக பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரொருவர் பிரிஸ்பேன் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இச்செயலுக்காக அவருக்கு 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் நாளை மறுதினம் இவர் மீண்டும் முற்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுவருவதால், அரசியல் கள கருத்துகளை தவிர்க்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
அச்சுறுத்தல்களின் அளவு அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டிய பிரதமர், புலனாய்வு பிரிவு பிரதானியும் இது பற்றி குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
" நாம் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்த வேண்டும். கருத்து சுதந்திரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்." எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் நாளை மறுதினம் பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.