உக்ரைன், ரஷ்ய போரில் உக்ரைனுக்காக போரிட்ட ஆஸ்திரேலியர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெஞ்சமின் லூயிஸ் என்பவருக்கே ரஷ்ய நீதிமன்றத்தால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் கூலிப்படையில் இணைந்ததன்மூலம் ரஷ்யாவின் குற்றவியல் சட்டத்தை அவர் மீறினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவர் 2023 ஆம் ஆண்டில் உக்ரைன் படையில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டுள்ளார். இவர் தொடர்பான தகவல்களை ரஷ்ய உளவு பிரிவு திரட்டியுள்ளது.
இவர் இன்னும் கைதாகவில்லை. திறந்த விசாரணைமூலம் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் தேடப்படுவோர் பட்டியலிலும் இணைக்கப்பட்டுள்ளார்.