இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி இன்றோடு ஈராண்டுகள் நிறைவு பெறுகின்றது. இத்தாக்குதலில் இஸ்ரேலில் இருந்த ஆயிரத்து 200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
ஈராண்டு நிறைவை ஆஸ்திரேலியாவிலுள்ள யூத சமூகம் இன்று நினைவுகூர்ந்தது. பல மாநிலங்களில் இதற்குரிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் மெல்பேர்ணில் ஹமாசுக்கு ஆதரவான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. " சுதந்திர பாலஸ்தீனம், ஒக்டோபர் 07: மீண்டும் இதை செய்" என பெயின்டால் எழுதப்பட்டுள்ளது.
மெல்பேர்ணில் மேலும் சில இடங்களிலும் ஹமாஸ் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இச்செயலை மாநில பிரீமியர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
" அப்பாவிகள்மீதான ஒக்டோபர் 07 தாக்குதல் மனித குலத்துக்கு எதிரானது. அது என்றும் கண்டிக்கத்தக்கது." - என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்துள்ளார்.