மெல்பேர்ண், கிரெமோர்னிலுள்ள யூத வழிபாட்டு தலத்துக்கு வெளியே அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை காட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயது இளைஞர் ஒருவரே துப்பாக்கி என சந்தேகிக்கப்படும் பொருளைக் காண்பித்து சைகை காட்டியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியில் பயணித்தவாறே இவ்வாறு அச்சுறுத்தல் சைகை காண்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், சாட்ஸ்வுட் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.
ஒக்டோபர் 07 தாக்குதல் நடந்து ஈராண்டுகள் நிறைவுபெறும் நாளிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.