“ ஒரு ஹமாஸ் ஆதரவாளர்கூட ஆஸ்திரேலியாவுக்கு வரமாட்டார் என்பதை லேபர் கட்சியால் உறுதிப்படுத்த முடியுமா.” என லிபரல் கட்சி செனட்டர் David Fawcett கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், சில பாலஸ்தீனர்களுக்கு இறுதி நேரத்தில் விசா மறுக்கப்பட்டுள்ளது ஏன் எனவும் அவர் வினா தொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய புலனாய்வு பிரதானியால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துகளை மையப்படுத்தியே அவரின் கேள்விகள் அமைந்திருந்தன.
“ ஆரம்பத்தில் அனுமதி வழங்கி இருந்தாலும், விசா வழங்க வேண்டாம் என பாதுகாப்பு தரப்பு பரிந்துரைத்தால் அதனை இரத்து செய்யும் நடைமுறை வழமையானது.” – என அமைச்சர் Murray Watt பதிலளித்துள்ளார்.
காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான விசா வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுவரும் நிலையிலேயே, அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹமாஸ் உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது.