மத்திய கிழக்கில் பிராந்திய போருக்குரிய அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆஸ்திரேலியப் படையினரை, லெபனானில் மீட்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நட்பு நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.
எனினும், லெபனானில் பாரியளவிலான மீட்பு நடவடிக்கைக்கு உடனடி சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
லெபனானில் உள்ள ஆஸ்திரேலியர்களை அங்கிருந்து உடன் வெளியேறுமாறு ஆஸ்திரேலியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. நெருக்கடி நிலை ஏற்பட்டால் அனைவருக்கும் ஒரே தடவையில் உதவும் இயலுமை இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லெபனானில் குறைந்தபட்சம் 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.