தென்கிழக்கு ஆசியாவுடன் தனது உறவை வலுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவளிக்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் கன்பராவில் ஆஸ்திரேலிய பிரதமருடன் இணைந்து நடந்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
"ஆஸ்திரேலியாவும் சிங்கப்பூரும் தமது எதிர்காலப் பாதுகாப்பும் செழிப்பும் ஆசியாவில் உள்ளது என்பதை அங்கீகரிக்கின்றன. அதாவது, நமது பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வடிவமைக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்." எனவும் சிங்கப்பூர் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
தென்கிழக்கு ஆசியாவுடனான தனது ஈடுபாட்டை ஆழப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவளிக்கும்.
இன்றைய உலகம் மிகவும் நிச்சயமற்றதாகவும், மேலும் நிலையற்றதாகவும் மாறி வருகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவும் சிங்கப்பூரும் ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு பொதுவான மூலோபாய முன்னோக்கைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்த வலுவான அடித்தளத்துடன், புதிய எல்லைகளை நாம் தொடர்ந்து பட்டியலிடவும், நமது இரு மக்களுக்கும் நீடித்த நன்மைகளை வழங்கவும் முடியும் என்று நான் நம்புகிறேன்." என சிங்கப்பூர் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.