தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த பிரிஸ்பேன் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிலேயே குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 45 வயதான ஏஞ்சலா காட்வின் என்பவரே கொலை செய்யப்பட்டவராவார்.
கொலையாளிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஆரம்பத்தில் மறுத்து, அதற்கு எதிராக மேன்முறையீடு செய்தார்.
எனினும், தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையிலேயே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை மற்றும் குடும்ப வன்முறை காரணமாகவே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தண்டனை காலத்தில் 80 சதவீதத்தை சிறைச்சாலையில் கழித்த பின்னரே பிணைகோரி விண்ணப்பிக்க முடியும்.