சிட்னி ஓபரா ஹவுஸ் வளாகத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு நியூ சவூத் வேல்ஸ் மாநில உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையுமென பொலிஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில், அது பற்றி ஆராய்ந்த பின்னரே நீதிமன்றத்தால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே. நீதிமன்ற தீர்ப்பைமீறி எவரேனும் குறித்த பகுதியில் ஒன்றுகூடினால் அவர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த மேற்படி பேரணியில் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கை குழு மதிப்பிட்டிருந்தது.