ஆஸ்திரேலிய பிரதமரை கொலை செய்வேன் என பேஸ்புக் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்த குயின்ஸ்லாந்து நபருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி 40 வயதான குறித்த நபர் பேஸ்புக் ஊடாகவே இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பதிவை பதிவிடும்போது தான் மதுபோதையில் இருந்தாகவும், மனச்சோர்வு காரணமாகவே இதனை செய்ததாகவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார். அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் ஒன்லைன்மூலம் குறித்த நபர் இன்று முன்னிலையானார். இதன்போதே அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.
அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.