இஸ்ரேலில் சிறை பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட ஏழு ஆஸ்திரேலியர்களில் நால்வர் இன்று காலை நாடு திரும்பினர்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் இவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
காசாவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்சென்ற படகுகள் இஸ்ரேல் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதில் பயணித்த பல நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
இதற்கு கடும் எதிர்ப்புகள் வலுத்ததையடுத்து கைதானவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் ஏழு ஆஸ்திரேலியர்களும் உள்ளடங்கி இருந்தனர்.
அபுபக்கர் ரபீக், ஜுலினட் லாமண்ட் மற்றும் ஹமிஷ் பேட்டர்சன் ஆகியோர் ஆர்வலர்கள் சிட்னி விமான நிலையம் ஊடாகவும், பியான்கா வெப் மெல்பேர்ன் விமான நிலையம் ஊடாகவும் நாடு திரும்பினர்.
இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட 54 வயதான திரைப்பட தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் லாமண்ட், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் காசா அமைதித் திட்டத்தை விமர்சித்தார். அது மோசமான தீர்வு முன்மொழிவு எனவும் சுட்டிக்காட்டினார்.
காசா அமைதித் திட்டத்தை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.