ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் இந்தோனேசியா கழுகுப்பார்வை செலுத்தியுள்ளது.
குறித்த ஒப்பந்தமானது தமது நாட்டு இறைமைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாது என இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
இப்படியான ஒப்பந்தங்கள் பிராந்திய ஸ்தீரத்தன்மைக்கு வழிவகுக்க வேண்டும். மாறாக புவிசார் அரசியல் போட்டி தன்மையை அதிகரிக்கக்கூடாது என்று இந்தோனேசியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்கு பப்புவா என்பது இந்தோனேசியாவின் ஒரு மாகாணமாகும். அங்கு சுதந்திரம்கோரி போராளிகள் குழு போராடிவருகின்றது. இந்தோனேசியா அங்கு தமது படைகளை நிலைநிறுத்தியுள்ளதால் அங்குள்ளவர்கள் பப்புவா நியூ கினியாவில் தஞ்சமடைந்துவருகின்றனர்.
இந்நிலையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் இவ்விவகாரத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையிலேயே, தமது நாட்டு இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
எல்லை பாதுகாப்பு தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியாவுடன் சிறந்த உறவு உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.