தனிப்பட்ட தரவுகளை திரட்டுவதற்காக மில்லியன் கணக்கான போலி குறுஞ்செய்திகளை அனுப்பினார் எனக் கூறப்படும் வடக்கு குயின்ஸ்லாந்தை சேர்ந்த நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என இணையவழி மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
4 முதல் 5 மில்லியன்வரையான போல் தகவல்களை இவர் பகிர்ந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருந்து அனுப்படும் குறுஞ்செய்திகள்போல் அவற்றை அனுப்பியுள்ளார்.
கைதான குறித்த நபர் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டதையடுத்து, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாளை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
12 ஆயிரம் சிம் அட்டைகள் உட்பட தொலைதொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.