நியூ சவூத் வேல்ஸ், Shellharbour விமான நிலையத்தில் இலகு ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
" தரையில் மோதிய பின்னர் விமானத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது." எனவும் பொலிஸார்
குறிப்பிட்டனர்.
விபத்தில் வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.