மெல்பேர்ணிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் கத்திகள் சகிதம் வந்த இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இரு குழுக்களுக்கிடையிலான இந்த மோதலால் பல்பொருள் அங்காடிக்குள் இருந்தவர்கள் பீதியடைந்தனர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னர், இரு குழுக்களும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டன.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. வன்முறை கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இடம்பெற்றுவருகின்றது.
பொது இடங்களில் கத்தி பயன்பாட்டுக்கு விக்டோரியாவில் கடந்த மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாநிலத்தில் வன்முறை குற்றங்கள் தீவிரமாகி வருகின்றது என்பதற்கு இது சான்றாகும் என்று மாநில எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.