பிரிஸ்பேனுக்கு மேற்கே இரு சிறார்களைக் கடத்தி, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மற்றுமொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
17 வயது சிறுவன் ஒருவரே, 14 மற்றும் 15 வயதுகளுடைய சிறார்கள்மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
15 வயது சிறுவன் காயமடைந்துள்ளார் எனவும், 14 வயது சிறுவனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள 17 வயது சிறாரை, இன்று சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.