மெல்பேர்ணில் தந்தை மற்றும் மகன்மீது இன்று அதிகாலை கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஐந்து சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 வயது மகனும், 47 வயது தந்தையும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற சிறார்களில் ஒருவர் அவர்கள்மீது மோதியுள்ளார்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட சிறார்கள் , தந்தை மற்றும் மகன் ஆகியோர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இருவரும் உயிராபத்து காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் பின்னர் சிறார்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் ஐவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்களை சிறார் நீதிமன்றத்தில் மற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.