பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின்போது சுயாதீன செனட்டர் லிடியா தோர்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அத்துடன், செனட்டர் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன் நேஷன் கட்சி தலைவர் பவுலின் ஹான்சன் வலியுறுத்தினார்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய செனட்டர் லிடியா தோர்ப், நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பேன் என மிரட்டினார்.
அத்துடன், காசா நிலைவரத்தை ஆஸ்திரேலிய பூர்வக்குடி மக்களுடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தை எரிப்பது தொடர்பில் அவர் விடுத்த எச்சரிக்கை அரசியல் புயலைக்கிளப்பிட்டுள்ளது. அதற்கு எதிராக லிபரல் கட்சி, வன் நேஷன் என்பன போர்க்கொடி தூக்கியுள்ளன.
அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் செனட்டரின் கருத்து சட்டம் மற்றும் அரசமைப்பை மீறியுள்ளதா என்பது பற்றி பெடரல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதற்கிடையில் தான் வன்முறையை ஆதரிக்கவில்லை எனவும், ஜனநாயக வழியிலேயே போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் இன்று காலை அறிக்கையொன்றின் ஊடாக போது சுயாதீன செனட்டர் லிடியா தோர்ப் தெரிவித்துள்ளார்.