நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள சிறிய நகரமொன்றில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கன்பராவிலிருந்து வடக்கே 75 கிலோமீற்றர் தொலைவிலுள்ள Gunnining நகரிலேயே 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்திலேயே நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், நிலநடுக்கத்தை 30 குடியிருப்பாளர்கள்வரை உணர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gunnining பகுதியில் சுமார் 700 பேர்வரையே வாழ்கின்றனர். கடந்த 23 ஆம் திகதியும் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.