அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் நேர்மையான பாதுகாப்பு உறவு உள்ளது என்று ஆஸ்திரேலிய துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு செலவீனங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுவருகின்றது என தகவல் வெளியாகும் சூழ்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமக்குரிய பாதுகாப்பு செலவீனத்தை ஆஸ்திரேலியா அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா பரிந்துரைத்திருந்தது. எனினும், இது தமது நாட்டில் எடுக்கப்பட வேண்டிய சொந்த முடிவென அப்போது ஆஸ்திரேலியா பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தோ - பசுபிக் உட்பட பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளும் கரிசனையுடன் செயற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.