சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவுகளை பதிவிட்ட சிட்டியை சேர்ந்த யுவதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவர் தொடர்பில் கடந்த ஜுன் மாதம் 23 ஆம் திகதி பெடரல் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னர் கண்காணிக்கப்பட்டார்.
அவர் சிட்னியை சேர்ந்த பெண் என்பது அடையாளம் காணப்பட்டது. பிறகு அவரது வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவரின் கையடக்க தொலைபேசி விசாரணை நிமித்தம் பறிமுதல் செய்யப்பட்டது.
வன்முறையை தூண்டும் விதத்தில் 43 இற்கு மேற்பட்ட ஆவணங்கள் தொலைபேசியில் இருந்துள்ளன. பதிவுகளை வெளியிட்ட சமூகவலைத்தளங்களும் கண்டறியப்பட்டன.
வன்முறை தூண்டல் உட்பட அவருக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் பொலிஸாரால் இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்காக அவர் ஐந்தாண்டுகள்வரை சிறை தண்டனை எதிர்கொள்ள நேரிடும் என தெரியவருகின்றது.