காசாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக படையினரை அனுப்புமாறு கோரப்பட்டால் அனுப்பி வைப்பதற்குரிய ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை மேற்கொண்டுவருகின்றது.
அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச அமைதித் திட்டத்தில் அமைதிக்காக சர்வதேச படைகள் நிலை நிறுத்தல் என்ற விடயமும் உள்ளது.
இதற்கமைய காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக முதற்கட்டமாக 200 அமெரிக்க படையினர் இஸ்ரேல் செல்லவுள்ளனர். அங்கிருந்து காசா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் காசாவுக்கு உதவுவது பற்றி ஆராயப்படுகின்றது, உதவி கோரப்பட்டால் படைகள் அனுப்படும் என ஆஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும், இதுவரையில் அவ்வாறானதொரு கொரிக்கை விடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு தொழில்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.