Northern Territory இல் குற்றச்செயல்கள் கணிசமானளவு குறைவடைந்துள்ளது என்று Northern Territory முதலமைச்சர் Lia Finocchiaro தெரிவித்தார். எனினும், தாங்கள் இன்னமும் பாதுகாப்பான சூழ்நிலையை உணரவில்லை என்று சில குடும்பங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
" குற்றச்செயல்களை தடுப்பதற்கு இன்னும் அதிகளமாக செயல்படவேண்டியுள்ளது. எனினும், கன்ட்றி லிபரல் கட்சியின் குற்றத் தடுப்புக் கொள்கை சிறப்பாக செயல்பட்டுவருகின்றது." எனவும் NT முதல்வர் குறிப்பிட்டார்.
புதிய சட்டத்தின் பிரகாரம் பிணைகோருபவர்களுக்கு அனுமதி வழங்கும் விகிதம் குறைவடைந்துள்ளது. இதனால் நபரொருவர் மீண்டும், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் தன்மையும் குறைவடைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 Northern Territory இல் குற்றச்செயல்கள் முழுவதும் குறைந்துள்ளது. எனினும், கிராமப்பகுதிகளில் இந்நிலைமை வேறுபடுகின்றது என தரவுகள் காண்பிக்கின்றன. பாலியல் வன்கொடுமை மற்றும் சொத்து சேதம் போன்ற குற்றச்சாட்டுகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை.