மலேசியாவில் நடைபெறும் 47 ஆசியான் மாநாட்டில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் பங்கேற்பார் என தெரியவருகின்றது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எதிர்வரும் 26ம் திகதி முதல் 28 ஆம் திகதி ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் நடைபெற உள்ளன.
அமெரிக்க ஜனாதபதி டிரம்ப் மற்றும் பல நாடுகளின் தலைவர்களை மலேசியா அழைத்துள்ளது.
ஜனாதிபதி டிரம்ப் அக்டோபர் 26ம் திகதி கோலாலம்பூருக்கு இரண்டு நாள் பயணமாக பயணம் செய்ய உள்ளார். ஆசியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியன்மார் மற்றும் கம்போடியா ஆகிய 10 உறுப்பு நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இம்மாநாட்டுக்கு இணையாக மேற்படி நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் ஆஸி. வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.