சிட்னியில் பேருந்துக்குள் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை ஒரு மணியளவில் சிட்னியின் உள் மேற்கில் மாரிக்வில்லில் ஒரு பேருந்தில் கத்திக்குத்துக்கு உள்ளான 51 வயது நபர், காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
கத்திக்குத்துக்குப் பிறகு, சாலையில் நடந்து சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்த சம்பவம் கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலை நடத்தினார் என சந்தேகிக்கப்படும் நபர் பேருந்தில் இருந்து வெளியேறி அருகிலுள்ள பூங்காவிற்குள் ஓடிய நிலையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து ஒரு கத்தி கைப்பற்றப்பட்டதாக தெரிய வருகிறது, பின்னர் அந்த நபர் நியூடவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.