வடக்கு டாஸ்மேனியாவில் Launceston பகுதியில் தீப்பிடித்து எரிந்த பஸ்ஸிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவிலேயே குறித்த பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணடைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டாலும் பஸ் முழுமையாக தீக்கிரையானது.
பஸ்சுக்குள் இருந்து பெண்ணொருவரிடம் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
உயிரிழந்துள்ள பெண் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.