சீனா எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் தொடர்பில் ஆஸ்திரேலியா அவதானம் செலுத்தி தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியே சீனா. எனவே, அந்நாட்டின் பொருளாதார நகர்வுகள் ஆஸ்திரேலிய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பொருளாளர் Jim Chalmers சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பொருளாளர் ஒருவர் ஏழு ஆண்டுகளுக்கு பிறகே பீஜிங் சென்றுள்ளதால் அவரின் பயணம் தொடர்பில் பொருளாதார நிபுணர்களும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியா, சீனா மூலோபாய பொருளாதார கலந்துரையாடலுக்காகவே அவர் பீஜிங் சென்றுள்ளார். இக்கலந்துரையாடலுக்குரிய இணைத்தலைமையையும் அவர் வழங்கிவருகின்றார்.
சீன பொருளாதார நிலைவரம் தொடர்பில் பொருளாளர் Jim Chalmers கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். சீன பொருளாதாரத்துக்கு ஏற்படும் சவால்களால் ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு ஏற்படும் விளைவுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.