ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கிடையில் புதிய காவல்துறை ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
இரு நாடுகளினதும் பொலிஸ் ஆணையாளர்களால் குறித்த ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படும்.
பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கையின் மற்றுமொரு அங்கமாகவே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது.
திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு, உளவு தகவல் பரிமாற்றம் மற்றும் உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ளன.