நியூ சவூத் வேல்ஸில் மேற்கு பகுதியிலுள்ள Newell நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர்.
மூன்று ஆண்களும், ஒரு பெண்ணுமே சம்பவ இடத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு 9.30 மணியளவில் இரு கார்கள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு, பின்னர் திறக்கப்பட்டது.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.