நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் Hunter Valley பகுதியில் பெண்ணொருவரைக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
46 வயது பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டாலும் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து 47 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.