நவ்ரு ஜனாதிபதி டேவிட் அடியாங் ஆஸ்திரேலியாவுக்கு அறிவிக்கப்படாத திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சரவை இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இவர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்கை சந்தித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் முதல் குழுவினரை நவ்ரு அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அந்நாட்டு ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளது.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நவ்ருவுக்கு 408 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா வழங்கியது.
இது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் 30 ஆண்டுகளில் 2.5 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட வேண்டும்.
காலவரையற்ற தடுப்பு காவல் சட்டவிரோதம் என ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் 2023 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனையடுத்து தடுப்பில் இருந்த பலர் விடுவிக்கப்பட்டது. 303 பேர்வரையில் இவ்வாறு சமூகத்தில் விடுக்கப்பட்டுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.