தென்னாபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொக்கைன் போதைப்பொருள் கடந்திய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
தென்னாபிரிக்காவில் இருந்து கட்டார் வழியாக சிட்னி வந்த விமானத்திலேயே சிட்னியை சேர்ந்த குறித்த நபர் 22 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார்.
சூட்கேஸ்களில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்தே போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது அவர் சிக்கியுள்ளார்.