உணவு பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். இது தொடர்பில் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
வரி விலக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களில் மாட்டிறைச்சி முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவுக்கு வருடாந்தம் 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான மாட்டிறைச்சியை ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்கின்றது. ஆஸ்திரேலிய ஏற்றுமதியில் இது பிரதான இடத்தை வகிக்கின்றது.
இந்நிலையில் வரி விலக்கானது தமக்கு நன்மை அளிக்கும் என ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.