ஆஸ்திரேலியாவுக்குள் விநியோகிப்பதற்காக 45 கிலோ ஐஸ் போதைப்பொருளை கடத்துவதற்குரிய முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா பொலிஸ் என்பவற்றுடன் இணைந்து ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் நடத்திய கூட்டு விசாரணையின் அடிப்படையிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025 நவம்பர் ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து விக்டோரியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐஸ் போதைப்பொருள் குறித்து துபாய்பொலிஸாருக்கு உளவு தகவல் கிடைத்துள்ளது.
இது பற்றி மலேசியா , கோலாலம்பூரில் உள்ள ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மலேசியா,கோலாலம்பூர் வழியாகவே போதைப்பொருள் கடத்தப்படவிருந்தது.
மலேசியா பொலிஸாரின் உதவியுடன் 2025 நவம்பர் 7ஆம் திகதி ஐஸ் போதைப்பொருள் கடத்தப்பட்ட கொள்கலன் பரிசோதிக்கப்பட்டது. மறைத்துவைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.