சிட்னி வடக்கு பகுதியில் கார் மோதியதில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 8 மணியளவிலேயே இவ்விபத்துஇடம்பெற்றுள்ளது.
தனது கணவன் மற்றும் 3 வயது குழந்தையுடன் குறித்த கர்ப்பிணி பெண் நடந்துசென்றபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.
8 மாத கர்ப்பிணியான 33 வயது பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். வயிற்றில் இருந்த குழதையும் உயிரிழந்துள்ளது.
19 வயது சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்காலிக ஓட்டுநர் உரிமமே இருந்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.