ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜி – 20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் தென்னாபிரிக்கா, ஜொகனஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காகவே பிரதமர் தென்னாபிரிக்கா செல்கின்றார். வெளிவிவகார அமைச்சர் உட்பட உயர் மட்ட தூதுக்குழு அவருடன் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜி – 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
எனினும், ஏனைய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரியவருகின்றது. அவர்களுடன் ஆஸ்திரேலிய பிரதமர் இரு தரப்பு சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.