தனது முன்னாள் காதலியை கொலை செய்துவிட்டு, அவரது உடலை எரித்த கொலையாளிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 வயதான லாச்லன் யங் என்பவருக்கே விக்டோரியா மாநில உச்ச நீதிமன்றம் இன்று மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.
22 வருடங்கள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனையை எதிர்கொண்ட பின்னரே அவர் பிணைகோரி விண்ணப்பிக்க முடியும்.
2024 ஏப்ரலில் தனது முன்னாள் காதலியான ஹன்னா மெக்குயரை தான் கொலை செய்ததை யங் மறுத்தார். பின்னர் அவர் உண்மையை ஒப்புகொண்டார். கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பின்னர் எரித்ததாக அவர் வாக்குமூல் வழங்கினார்.
இது தொடர்பான வழக்கிலேயே அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.