சிட்னியில் நடந்த நவ நாஜிகள் போராட்டத்தில் பங்கேற்ற தென்னாபிரிக்காவை சேர்ந்த நபரின் விசா இரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் தடுப்பு மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 8 ஆம் திகதி தேசிய சோசலிச வலையமைப்பால் மேற்படி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கறுப்பு உடையுடன் களமிறங்கிய நவ நாஜிகள் சட்டம், ஒழுங்குக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயல்பட்டனர்.
இப்போராட்டத்தில் தென்னாபிரிக்காவை சேர்ந்த மேத்யூ க்ரூட் என்பவரும் பங்கேற்றிருந்தார். இவரும், அவரது மனைவியும் வேலை விசாவிலேயே 2022 இல் ஆஸ்திரேலியா வந்துள்ளனர்.
நவ நாஜிகளின் போராட்டம் தொடர்பில் நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் மேத்யூ க்ரூட்டின் விசா இரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது அவர் தடுப்பு காவலில் உள்ளார்.