நியூ சவூத் வேல்ஸ் தெற்கு கடற்கரை பகுதியிலுள்ள பூங்காவொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதியே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 45 வயது நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இன்று காலை மேற்படி நால்வரும் கைதாகியுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.