நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் ஸ்பீக்மேனின் ராஜினாமாவையடுத்து நியூ சவூத் வேல்ஸ் மாநில லிபரல் கட்சி தலைவராக கெல்லி ஸ்லோன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
லிபரல் கட்சியின் நிழல் சட்டமா அதிபர் அலிஸ்டர் ஹென்ஸ்கென்ஸ் தலைமைப்பதவிக்கான போட்டியில் இருந்து விலகியதையடுத்து, இவர் அப்பதவிக்கு ஏகமனதாக தெரிவுசெய்ப்பட்டுள்ளார்.
இதற்காக இன்று காலை லிபரல் கட்சியின் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. துணை தலைவர் நடாலி வார்டூ தனது பதவியை தக்கவைத்துக்கொண்டார்.
நியூ சவூத் லே;ஸ் மாநிலத்தில் லிபரல் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்துவார் எனவும், லிபரல் கட்சி மலர பாடுபடுவார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.