மெல்பேர்ணில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் கொடி காட்சிப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பெரடல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போராட்டத்தின்போது ஹிஸ்புல்லா அமைப்பின் கொடியை அசைக்க முற்பட்ட போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
மெல்பேர்ணில் நடைபெற்ற காசாவுக்கு ஆதரவான பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேற்படி போராட்டத்தில் சிறு குழுவொன்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரின் படத்தை காட்சிப்படுத்தியிருந்தது. அத்துடன், ஹிஸ்புல்லா அமைப்பின் கொடியும் அசைக்கப்பட்டது.
ஹிஸ்புல்லா அமைப்பு ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். எனவே, அவ்வமைப்பின் சின்னங்களை பயன்படுத்துவது குற்றமாகும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போர் நிறுத்தத்துக்கான அழைப்பை ஆஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் விடுத்திருந்தாலும், அதனை இஸ்ரேல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.